சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் ரூ.78 லட்சம் பணம் பறிமுதல்

0 760
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் ரூ.78 லட்சம் பணம் பறிமுதல்

ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்த பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய சோதனையில், 78 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பாலமுரளி என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரையும், அவர் கொண்டு வந்த பணத்தையும் வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதனிடையே, சென்டிரல் ரயில் நிலையத்தில் இம்மாதத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 2 கோடியே 64 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப்படையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments