விமானத்தில் புகுந்து அலறவிட்ட குருவி : அந்தரத்தில் பயணிகள் அச்சம்

0 1217

சீனாவில், பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்துக்குள் திடீரென பறக்கத் தொடங்கிய குருவியை பணிப்பெண்கள் லாவமாகப் பிடித்தனர்.

அன்ஹுய் மாகாணத்தின் மீது ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானம் பறக்கும் போது அந்த குருவி உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என அந்த விமானத்தின் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகள் அமரும் இடத்தில் அந்த குருவி பறந்ததாகவும், பைலட்கள் விமானத்தை இயக்கும் காக்பிட்டிற்குள் அது நுழையாததால், பயணிகளின் உயிருக்கு அந்த பறவையால் எந்த விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments