கூண்டில் சிக்கி தப்பிச் சென்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

0 681
கூண்டில் சிக்கி தப்பிச் சென்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் தாளவாடியில், வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி தப்பிச் சென்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

செயல்படாத கல்குவாரியில் பதுங்கியிருந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை அதிகாலையில் கூண்டில் சிக்கியது. ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வேறு கூண்டுக்கு மாற்றும் போது அது தப்பிச் சென்றது.

இதனையடுத்து மீண்டும் அந்த கல்குவாரியிலேயே பதுங்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், பவானிசாகர் அடுத்துள்ள வனப்பகுதியில் அதனை விட திட்டமிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments