அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதி 2 இளைஞர்கள் படுகாயம்.. சிசிடிவிக் காட்சி வெளியீடு..!

0 1884
அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதி 2 இளைஞர்கள் படுகாயம்.. சிசிடிவிக் காட்சி வெளியீடு..!

புதுச்சேரி அடுத்த ஆரோவில் அருகே சாலையை கடப்பதற்காக அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதியதில் 2 இளைஞர்கள் காயமடைந்த விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த 19ஆம் தேதி புதுச்சேரி சேதராபட்டில் இருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி பைக்கில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது வலதுபுறம் வந்த பேருந்தை முந்தி சென்று சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு பேருந்து மீது இளைஞர்கள் சென்ற பைக் மோதியதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு காயமடைந்தனர்.

விசாரணையில் விபத்தில் சிக்கியது கருவடிகுப்பத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் மோகன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments