ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லத்தக்கதல்ல.. ஓ.பி.எஸ்.-ஐ பொருளாளர் என குறிப்பிட்டு இ.பி.எஸ். கடிதம்..!

0 1546
ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லத்தக்கதல்ல.. ஓ.பி.எஸ்.-ஐ பொருளாளர் என குறிப்பிட்டு இ.பி.எஸ். கடிதம்..!

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். எழுதிய கடிதத்திற்கு, இ.பி.எஸ். பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தன்னை தலைமைக் கழக செயலாளர் என்றும் ஓ.பி.எஸ்.-ஐ பொருளாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், 2021 ஆம் ஆண்டு செயற்குழுவில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் அவை காலாவதி ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த பொதுக்குழுவை நடத்த விடாமல் காவல்துறைக்கும் நீதிமன்றத்துக்கும் சென்று அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டுசென்றுவிட்டு தற்போது கடிதம் அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்றும் இபிஎஸ் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments