நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் 1,900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் - நீதிபதி அதிர்ச்சி..!
நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் 1,900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் - நீதிபதி அதிர்ச்சி..!
நாகர்கோவில் காசியின் செல்போன், லேப்டாப்பில் 1,900 நிர்வாண படங்களும், 400 ஆபாச வீடியோக்களும் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை எடுத்து மிரட்டிய வழக்கில் காசி கைதாகினார்.
இவ்வழக்கில் லேப்டாப்பில் இருந்த படங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அவரது தந்தை, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், காசியால் 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
Comments