அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் : அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் 20 வயது இளம்பெண் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் : அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் 20 வயது இளம்பெண் உயிரிழப்பு..!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண் மர்ம நபரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
லெக்சிங்டன் அவென்யூவிற்கு அருகே 20 வயதுள்ள இளம்பெண் ஒருவர் தனது 3 மாத கைக்குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளும்போது முகமூடி அணிந்த நபர் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.
இந்த சம்பவத்தில் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. நியூயார்க்கில் துப்பாக்கி வன்முறைக்கு இது மேலும் ஒரு உதாரணம் என்று தெரிவித்துள்ள மேயர் எரிக் ஆடம்ஸ், இதனை எதிர்த்து போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Comments