டீக்கடை உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு பைக், செல்போன் பறிப்பு.. படுகாயங்களுடன் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி..!

டீக்கடை உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு பைக் & செல்போன் பறிப்பு.. படுகாயங்களுடன் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி..!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில், டீக்கடை உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு அவரது பைக் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவளூர் கூட்டுச்சாலை பகுதியை சேர்ந்த பாலமுருகன், நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்த போது, ஒரே பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பணம் தர பாலமுருகன் மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் அவரை கத்தியாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிவிட்டு அவரது பைக்கையும், செல்போனையும் பறித்து சென்றனர்.
படுகாயமடைந்த பாலமுருகன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments