கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விபரீதம்.. விஷவாயு தாக்கியதில் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு..!

0 806
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விபரீதம்.. விஷவாயு தாக்கியதில் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு..!

சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெருங்குடி காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூலி தொழிலாளிகள் பெரியசாமி மற்றும் தட்சணாமூர்த்தி ஆகியோர் தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் இருவரும் கூச்சலிட்டதையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மயங்கி இருந்த இருவரையும் மீட்ட நிலையில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தட்சணாமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments