உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிந்த ஆட்டோ.. டிரைவர் உட்பட 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு

0 3655

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து, ஆட்டோ தீப்பற்றி 8 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

சில்லகொண்டையா பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தங்களது பணிக்காக ஆட்டோவின் மேல் இரும்புக் கம்பிகளை வைத்து கொண்டு சென்றுள்ளனர். கிராமத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும், எதிர்பாராத விதமாக உயரழுத்த மின்கம்பி ஆட்டோ மீது அறுந்து விழுந்து அதன் மேலிருந்த இரும்புக் கம்பியில் உரசியதில் ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியது.

உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் வெளியே குதித்து படுகாயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments