தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்ம கும்பல் ... குடோனில் இருந்த பொருட்களுக்கு தீ வைப்பு

0 765

சிதம்பரம் அருகே தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்மகும்பல், குடோனில் இருந்த பொருட்களை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தில் 7 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியகுப்பம் கிராமத்தில் செயல்படாத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் அடிக்கடி அங்கிருந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 26 மற்றும் 27-ஆம் தேதியில் ஆலைக்குள் நுழைந்த கும்பல் அங்கிருந்த முக்கிய கோப்புகள், எலக்ட்ரானிக், காப்பர் உள்ளிட்ட  பொருள்களுக்கு தீ வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments