முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது

0 844
முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது


சென்னையில், சிசிடிவி-யில் சிக்காமல் இருக்க முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருவேற்காட்டில், வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 சவரன் செயின் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களைத் திருடி சென்றனர்.

இதில் ஈடுபட்ட இருவரும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த இடங்களில் முகத்தை துண்டால் மறைத்துக்கொண்டனர்.

திருவேற்காட்டில் திருடி விட்டு நொளம்பூரில் வீட்டில் தங்கி இருந்த அண்ணன், தம்பியை போலீசார் செல்போன் சிக்னல்களை வைத்து கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments