8 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டதில் பெண் குழந்தை பலி..

0 4515
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 8 வயது சிறுவன் துப்பாக்கியால் விளையாட்டாக சுட்டதில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 8 வயது சிறுவன் துப்பாக்கியால் விளையாட்டாக சுட்டதில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ரோடரிக் ராண்டால் (Roderick Randall) தனது மகன், பெண் தோழி, பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

ராண்டால் வெளியே சென்ற போது அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்த அவரது மகன் விளையாட்டாக சுட்டுள்ளான். அவரது பெண் தோழியின் ஒரு வயது பெண் குழந்தையின் உடலை துளைத்து வெளியே வந்த குண்டு மற்றொரு குழந்தையின் மீதும் பாய்ந்தது. இதில் அந்த ஒரு வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிய ராண்டலை, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, கவனக்குறைவாக செயல்பட்டது போன்ற காரணங்களால் போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments