ராஜஸ்தானில் தையற்கலைஞர் படுகொலை குறித்து விசாரணை நடத்த என்.ஐ.ஏவிற்கு உத்தரவு.!

ராஜஸ்தானில் தையற்கலைஞர் படுகொலை குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக இணையத்தில் பதிவிட்ட, உதய்பூரைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால், இருவரால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கொலை காட்சிகளை வீடியோ இணையத்தில் பதிவேற்றிய கொலைகாரர்கள், பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்த கொடூர படுகொலை குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய புலனாய்வு முகமைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பின்னணியில் உள்ள சர்வதேச தொடர்பு குறித்து ஆய்வு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Comments