அவ்வப்போது ஓ.பி.எஸ் நிலைப்பாட்டை மாற்றுகிறார் - இ.பி.எஸ்
ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கட்சி விதிகளுக்கு எதிராக அதிமுகவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Comments