அபுதாபியில் இருந்து பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லி திரும்பினார்.. 60 மணி நேர சுற்றுப்பயணத்தில் 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..!

அபுதாபியில் இருந்து பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லி திரும்பினார்.. 60 மணி நேர சுற்றுப்பயணத்தில் 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..!
ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 60 மணி நேரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி 15 நிகழ்வுகளில் பங்கேற்று அபுதாபியில் இருந்து தனி விமானம் மூலம் நள்ளிரவில் நாடு திரும்பினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் மோடி முனிச் நகரில் இந்திய வம்சாவளியினரின் அமோக வரவேற்புக்கு இடையே உரையாற்றினார்.
இந்தியா தனது கனவுகளை நிறைவேற்றும் ஆற்றலுடன் திகழ்வதாக பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.அடுத்து ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
15 நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு நல்லுறவு தொடர்பாக பேச்சு நடத்தினார்.
திரும்பும் வழியில் அபுதாபி சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்திலேயே ஷேக் முகமது பின் ஜயத் வரவேற்றார். ஷேக் காலிபா பின் ஜயத்தின் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
Comments