எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

0 2734
எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

காவல் நிலையத்துக்குள் புகுந்து ஆவணங்களை சேதப்படுத்தும் எலிகளால் கடும் மன உளைச்சலுக்குள்ளான போலீசார் பூனை வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கவுரிபிதனூர் காவல் நிலைய போலீசார் தான் எலிக்கு பயந்து பூனையாரிடம் சரண் அடைந்துள்ளனர்.

இந்த காவல் நிலையத்தில் எலித் தொல்லை அதிகமானதால் பூனைகளை வளர்க்கும் முடிவை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

போலீஸ் ஸ்டேசனில் உள்ள ஆவணங்களை எலிகள் நாசம் செய்ததால் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் உரிய பதில் சொல்ல இயலாமல் விழிபிதுங்கி நின்றுள்ளனர்.

எலிகளை பிடிக்க பெட்டி வைத்து பார்த்தும் வேலையாகாததால் பூனையாரின் உதவியை நாடி உள்ளனர். அண்மையில் எலிகளை வேட்டையாட இரண்டு பூனைகள் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன.

அவைகள் எலி இருக்கும் இடத்தை தேடிப்பிடித்து கச்சிதமாக காரியத்தை முடித்து விடுவதால் தாங்கள் நிம்மதியாக பணி செய்வதாக அங்குள்ள காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பூனைகள் நடமாட்டத்தால் எலிகளால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் காவலர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments