தொட்டபெட்டாவில் 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட 6 பேர்...

0 1167
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில், 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில், 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் தொட்டபெட்டா வியூ பாயிண்ட்-டில் இருந்து உதகைக்கு வாடகை காரில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

காருக்குள் இருந்த சுற்றுலா பயணிகளை அவ்வழியாக சென்றவர்கள் கீழே இறங்கி மீட்டனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments