சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைப்பு.!

0 788

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாரிலிருந்து 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

108 அடி உயர கிழக்கு ராஜகோபுரத்தில் நிறுவப்பட உள்ள இந்த நான்கே முக்கால் அடி உயர செம்பு கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த விவசாய சகோதரர்கள் 2 பேர் நேர்த்தி கடனாக வழங்கி உள்ளனர்.

கலசங்களுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், கலசங்களை ஏற்றி செல்லும் லாரியை மலர் தூவி வழியனுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments