பூட்டிய வீட்டில் கொள்ளை அடித்த 50சவரன் நகைகள் மீட்பு

0 1003

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூட்டிய வீட்டில் கொள்ளை அடித்த 50சவரன் நகைகளை சிசிடிவி உதவியுடன்  காவல்துறையினர் மீட்டனர். 

ராஜரத்தினம் நகரில் மரியதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த திங்களன்று நடந்த  திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் உடன்குடியைச் சேர்ந்த செல்வராஜ், சங்கர் மற்றும் இடைச்சிவிளையை சேர்ந்த மைக்கேல்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் 3பேரும் இரும்பு, தகரம், பிளாஸ்டிக் போன்றவற்றை விலைக்கு வாங்குவதாக கூறி தெருவை நோட்டமிட்டு பூட்டிய வீட்டில் கொள்ளை அடிப்பதை தொழிலாக கொண்டது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments