இத்தாலியில் சலவை இயந்திரத்தை தூக்கி எறிந்து சுவீடன் நாட்டு வீரர் ஒருவர் கின்னஸ் சாதனை.!

இத்தாலி நாட்டில் 14அடி 7.2 அங்குல தூரத்திற்கு சலவை இயந்திரத்தை தூக்கி எறிந்து சுவீடன் நாட்டு வீரர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Milanல் நடைபெற்ற இந்த போட்டியில் சுவீடனைச் சேர்ந்த Johan Espenkrona மற்றும் டச்சு வீரர் Kelvin de Ruiter ஆகியோர் நேருக்கு நேராக மோதினர்.
இப்போட்டியில் Kelvin de Ruiter 14அடி ஒரு அங்குல தூரத்திற்கு சலவை இயந்திரத்தை தூக்கி எறிந்தார். ஆனால் Johan Espenkrona 14அடி 7.2 அங்குல தூரத்திற்கு சலவை இயந்திரத்தை வீசி பட்டத்தை கைப்பற்றினார்.
Comments