உக்ரைனில் 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய தலங்கள் அழிப்பு - யுனெஸ்கோ தகவல்

0 876

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், உக்ரைனில் 150-க்கும் மேற்பட்ட கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரிய தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐநாவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். உக்ரைனில் 152 பாரம்பரிய மற்றும் கலாச்சார தலங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ரஷ்யப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டன.

இதனிடையே, உக்ரைனின் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், எந்த ஒரு சூழலிலும் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் யுனெஸ்கோ இயக்குநர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments