கொட்டும் மழையில் தாறுமாறாக சென்ற தனியார் பேருந்து.. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து..!

0 2154
கொட்டும் மழையில் தாறுமாறாக சென்ற தனியார் பேருந்து.. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து..!

சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

தருமபுரி நோக்கி பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து பண்ணப்பட்டி பகுதியில் வந்த போது மழை பெய்துள்ளது.

கொட்டும் மழையிலும் ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னே சென்ற கார் மீது மோதிவிட்டு, இடதுபுறமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீதும் மோதியது.

பேருந்து மோதிய வேகத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments