அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்வதாக தகவல்.!

0 2029

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், எம்.பி. ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெள்ளியன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

கூட்டணிக் கட்சி என்கிற முறையில் வேட்பு மனு முன்மொழிதல், வழிமொழிதலில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் செல்வதாகக் கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாகத் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை அணுகுவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments