அசாமில் கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்பு

அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த மக்களை கயிறு கட்டி மீட்பு படையினர் மீட்டனர்.
கனமழையால் 31 மாவட்டங்களில் கடும் வெள்ள சேதங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு நாளில் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
55 லட்சம் பேர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Comments