சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடிரென தீப்பிடித்து எரிந்த கார்..!

சென்னையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருச்சியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு குடும்பத்தினருடன் திருச்சிக்கு புறப்பட்டார்.
ஐஐடி கேட் அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் புகை வருவதை கண்டதும் காரில் இருந்த 4 பேரும் உடனடியாக வெளியேறினர்.
அடுத்த சில வினாடிகளில் கார் தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Comments