ஆக்கிரமிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த பெண் மீது தாக்குதல்..!

சென்னை வேளச்சேரியில் சாலை ஆக்கிரமிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த பெண்மணி அண்டை வீட்டுக்காரரால் கொடூரமகாத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
TNHB காலனியில் வசித்து வரும் தனசெல்வி என்பவர், பக்கத்து வீட்டில் வசித்த வள்ளி என்பவர் சாலையை ஆக்கிரமித்து வீட்டை விரிவு படுத்துவதால் இடையூறு ஏற்படுவதாகப் போலீசில் புகாரளித்துள்ளார்.
போலீசார் வந்து விசாரித்து விட்டு சென்ற பிறகு வள்ளியின் மகனான விஜய், தனசெல்வியையும், அவரது கணவரையும் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
Comments