ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு.!

0 1728

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகருக்கு அருகே அதிகாலையில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், பக்திகா மாகாணத்தில் 4 மாவட்டங்களும், கோஸ்ட் மாகாணத்தில் ஒரு மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், அவசரமாக அமைச்சரவையை கூட்டிய தாலிபான் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments