ஜூன் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு.!

0 1614

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு வருகிற 24-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வருகிற 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதியும், 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments