சாகசம் செய்ய முயன்ற கன்னட நடிகர் திகாந்த் தவறி விழுந்து பலத்த அடி.. மருத்துவமனையில் அனுமதி.!

0 1890

கோவாவில் சாகசம் செய்ய முயன்ற கன்னட நடிகர் திகாந்த் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அலைச்சறுக்கு, நீச்சல், மலையேற்றம் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட திகாந்த், விடுமுறையைக் கொண்டாட தனது மனைவியுடன் கோவா சென்றார்.

அவரது வழக்கமான பேக் ப்ளிப்  சாகசத்தை செய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அவரது முதுகுத் தண்டு மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments