சீனாவிற்கு குத்தகைவிடப்பட்ட துறைமுகப் பகுதியில், இலங்கை அரசு ராணுவத் தளத்தை அமைக்க முடிவு

0 212

சீனாவிற்கு குத்தகைவிடப்பட்ட துறைமுகப் பகுதியில், இலங்கை அரசு ராணுவத் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்சே அதிபராக இருந்தபோது, இலங்கையின் தெற்கு முனையில் உள்ள ஹம்பன்தோடா ((Hambantota)) தீவுப் பகுதியை 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்த சீனா, அங்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய துறைமுகத்தை அமைத்தது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதால், இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதலே இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், ஹம்பன்தோடா துறைமுகப் பகுதியை ராணுவத் தேவைக்காக சீனா பயன்படுத்த முடியாது எனக் கூறியுள்ள இலங்கை அரசு, அங்கு தமது கடற்படை தளத்தை அமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments