மேகதாது அணை பிரச்சனை.. தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி பயணம்.!

0 1985
தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி பயணம்

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி சென்றுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சென்றுள்ள அக்குழுவினர் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்னை தொடர்பாக விவாதிக்கின்றனர்.

இதற்கிடையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியானதும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அதன் மீதான முடிவுகள் வெளியாகும் வரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதுபற்றி விவாதிக்கக்கூடாது என்றும் இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு அறிவுரை வழங்குமாறும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments