ஜூன் மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை பெய்துள்ளது. மாலையில் பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது, தொடர்ந்துவிட்டு விட்டுப் பெய்த மழை இரவில் கனமழையாக நீடித்தது.
ஜூன் மாதத்தில் பெய்துள்ள மழையின் அளவு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாதது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று சென்னையில் மழை குறையத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றின் அழுத்தம் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Comments