பா.ஜ.க. கூட்டணி குடியரசுத்தலைவர் வேட்பாளர் அறிவிப்பு..!

0 7481

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் திரவுபதி முர்மு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முர்மு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பொறுப்பு வகித்தவர்.

மேலும், மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையையும் பெற்றவர் திரவுபதி மர்மு. பாஜகவைச் சேர்ந்த இவர், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்துடன் அக்கட்சி கூட்டணியில் இருந்தபோது அமைச்சராக பணியாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments