அவருக்கு இவுங்க நாலாவது.. இவங்களுக்கு அவரு ரெண்டாவது.. நாட் அவுட் காதல் அட்ராசிட்டி..!காதல் மன்னனான அப்பா நடிகர்..!

0 15427

60 வயதான பிரபல நடிகர் நரேஷ் ஏற்கனவே திருமணமான 43 வயது நடிகை பவித்ரா லோகேஷை 4 வது மனைவியாக திருமணம் செய்து கொண்டநிலையில், இவர்களது திருமணம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றது.

தமிழ், தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை பவித்ரா லோகேஷ். அண்மையில் வெளியான ஆர்.ஜே பாலாஜியின் வீட்டுல விசேசங்க படத்திலும் நடித்துள்ளார். திரை உலகின் அழகான குணச்சித்ர நடிகையாக அறியப்பட்ட பவித்ராவுக்கு டுவிட்டர் மற்றும் முக நூலில் தனிப்பட்ட ரசிகர்வட்டம் உண்டு.

நூற்றுக்கனக்கான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள பவித்ரா, கன்னட நடிகர் சுசீந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007 ஆம்ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுசீந்திர பிரசாத்துக்கு இது 2 வது திருமணம். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடித்த போது நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும், குணச்சித்திர நடிகருமான நரேஷ் உடன் நெருக்கம் ஏற்பட்டது. நடிகர் சங்க நடவடிக்கைகளில் நரேஷுடன் இணைந்து பணியாற்றியதால் இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து ஆளுக்கு ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வரும் 60 வயது நரேஷுக்கு 43 வயது பவித்ரா லோகேஷ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு குறித்து திரை உலகில் பல்வேறு விதமாக பேசி வந்தனர்.நரேஷும், பவித்ரா லோகேஷும் ஜோடியாக சென்று கோவில்களில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களில் வெளியானது.

இருவரும் கணவன் மனைவி போல சுற்றிவருவதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 3 மனைவி இருக்கும் போது எதற்கு 4 வது மனைவி என்று கேட்டு சமூக வலைதளத்தில் நரேஷை கடுமையாக வறுத்து எடுத்து வருகின்றனர்.

நரேஷ், பவித்ரா இருவருமே முறைப்படி விவாகரத்து பெறாமல், திருமணம் செய்து கொண்டதால் , தங்கள் புதிய திருமண அறிவிப்பை பகிரங்கப்படுத்தாமல் ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

நடிகை பவித்ராவை பொறுத்தவரை ஏற்கனவே ஒருவருக்கு 2 வது மனைவியாக இருந்தார். தற்போது பவித்ராவுக்கு நரேஷ் 2 வது கணவராகி உள்ளார். என்று கூறப்படும் நிலையில் இவருக்கு அவுங்க நாலாவது..! அவங்களுக்கு இவரு ரெண்டாவது ..! என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments