எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ள அவரது திருநங்கை மகள்.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

0 16372

உலகப் பெருங் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறிய அவரது திருநங்கை மகள், தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க். தந்தை எலான் மஸ்க் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க விரும்புவதாக கூறியுள்ள அவர், தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், தனது பாலினத்தை ஆண்பாலில் இருந்து பெண்பாலாக மாற்றி புதிய சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments