தங்கையின் திருமணத்திற்கு இறந்த தந்தையையே பரிசாக அளித்த அண்ணன்... கண்ணீர் விட்டு கதறி அழுத தாய்.. நெகிழ்ச்சி தருணம்..

0 4082
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலையை, மணமேடையில் இருந்த தங்கைக்கு திருமண பரிசாக அவரது அண்ணன் வழங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலையை, மணமேடையில் இருந்த தங்கைக்கு திருமண பரிசாக அவரது அண்ணன் வழங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்-ஜெயா தம்பதியினருக்கு  பனிகுமார் என்ற மகனும், சாய் என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில்  மகள் சாய்க்கும் மதன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. அப்போது தந்தை மீது அதிக பாசம் வைத்திருக்கும் தங்கைக்கு திருமண பரிசாக தந்தையையே வழங்க சகோதரன் பனிகுமார் முடிவு செய்தார்.

அதன்படி கர்நாடகாவில் உள்ள சிற்பி மூலம் தந்தையின் மெழுகு சிலையை தத்ரூபமாக தயார் செய்து திருமணம் முடிந்ததும் மணமேடையில் இருந்த சாயிடம் பனிகுமார் வழங்கினார்.

இதனைக் கண்ட மணப்பெண் சாயி, அவரது தாய் ஜெயா மட்டுமின்றி திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments