உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம்.!

0 1939

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் சிறப்புகளை விளக்கும் இந்த செய்தித்தொகுப்பு உங்களுக்காக...

உலகிற்கு இந்தியா அளித்த கொடைதான் யோகா! உடலையும், மனத்தையும், உள்ளத்தையும் ஒருங்கிணைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்வது இதன் தனிச்சிறப்பு!

மன சஞ்சலமே வாழ்க்கை, மனப்போராட்டமே தொழில், உடலை வருத்திக் கொள்வதே கொள்கை என சோகம், கோபம், பதற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல், மூட்டு வலி என ஒரு கட்டத்தில் நோய்கள் இவர்களைத் தேடி வருகின்றன. இவற்றில் சிக்காமல் உடலைப் பாதுகாப்பதுதான் யோகா பயிற்சி!

உடலுக்கு உகந்த உணவுடன், தேவையான உடற்பயிற்சியும் சேரும்போது உடலும் மனமும் வலுவடைகின்றன. ஆசனம், பிராணாயமம், தியானம் இவற்றைத் தொடர்ச்சியாக செய்வதால் உடல் உறுப்புகள் தூய்மையாகி சீராக இயங்குகின்றன.

சீரான மூச்சுக்கும், நாடித்துடிப்புக்கும், உதவுகிறது யோகா பயிற்சி! கூடும் ரத்த அழுத்தத்தை குறைத்து, எப்போதும் புத்துணர்ச்சியை அளிக்கிறது யோகா பயிற்சி! உடலையும், மனத்தையும் உறுதியாக்கி எதையும் தாங்கும் பக்குவத்தையும், நோய்களை நெருங்கவிடாத எதிர்ப்பு சக்தியையும் கிடைக்கச் செய்கிறது யோகா பயிற்சி! முதுமைத் தோற்றத்தை தள்ளிப்போட வைக்கிறது யோகா பயற்சி!

உடல், மனம், ஆன்மாவைத் தூய்மையாக்கும் யோகா பயிற்சியை செய்வது ஒவ்வொருவருக்கும் அவசியம்! தினசரி யோகா செய்தால் முதுமையில் இருந்தும், நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்பது நிச்சயம்!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments