அ.தி.மு.க.வில் வலுத்துள்ள ஒற்றைத் தலைமை முழக்கம்.. பல மாவட்டங்களில் இ.பி.எஸ்.க்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் தீர்மானம் நிறைவேற்றம்

0 3553
அதிமுகவில் ஒற்றைத் தலைமை முழக்கம் வலுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை முழக்கம் வலுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாகையில், அதிமுக மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், கட்சியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் வாணியம்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து பேட்டியளித்த அவர், அதிமுகவை பிளவுப்படுத்த ஓபிஎஸ் மூலம் திமுக தூண்டி வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments