ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை.!

0 3686

ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பட்டதாரியான பாண்டியன் என்பவர் மூன்று மாதங்களாக பணிக்கு செல்லாத நிலையில், தனது செலவிற்காக, செயலி மூலம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதில், ஆயிரத்து 500 ரூபாயை அவர் செலுத்தாததால், தொடர்ந்து மிரட்டல் விடுத்த கடன் செயலி நிறுவனம், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்கள், நண்பர்களின் எண்ணிற்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர், பெற்றோர் முன்னிலையில் அறையில் தாழிட்டுக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments