பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம்.. 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 3459

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரது குடும்பத்தினர், உணவுடன் பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதனிடையே, பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என கூறிய மருத்துவர்கள், சிறுவனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments