மனைவிக்கு வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்த கணவர்.. தாய், சேய் உயிரிழந்ததால் கணவர் கைது..!

0 7293
மனைவிக்கு வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்த கணவர்.. தாய், சேய் உயிரிழந்ததால் கணவர் கைது..!

சேலத்தில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்து, அதில் உயிரிழந்த தாயையும், சிசுவையும் புதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பார்வதி, அஜித்குமார் தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், 4-வதாக பார்வதி கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணி பார்வதிக்கு பேருகால வலி ஏற்பட்ட நிலையில், வீட்டில் வைத்தே கணவர் அஜித்குமார் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

தம்பதிக்கு இறந்தே பெண் சிசு பிறந்ததாகவும், சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு பார்வதியும் இறந்ததாக கூறப்படுகிறது. பார்வதி உடலையும் சிசு புதைத்த இடம் அருகே அஜித்குமார் புதைத்ததாக சொல்லப்படுகிறது.

ஊர் மக்கள் அளித்த புகாரில் போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றினர். அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments