குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து பாஜக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

0 2733
குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து பாஜக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக பாஜக ஒருங்கிணைப்புக் குழு நேற்று அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கூடியது.

ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நீடித்தது. இக்குழு பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்ய உள்ளது.

ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தோழமைக்கட்சித் தலைவர்களான நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, உள்ளிட்டோரின் ஆதரவை பாஜக நாடி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments