சென்னையில் வலம் வந்த லம்போர்கினி சொகுசு கார்கள் : கலர் கலராக ஊர்வலம் வந்த காட்சி

0 2498

மிழகம், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகாவில் லம்போர்கினி வகை சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள்  ஒன்றிணைந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

13 கார்கள் காவல்துறையினரின் உதவியுடன் சென்னையில் இருந்து ஈசிஆர் சாலை மார்க்கமாக மாமல்லபுரத்திற்கு அணிவகுத்து வந்தன. சாலை நெடுகிலும் அவற்றை கண்டு ரசித்த பொதுமக்கள் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

லம்போர்கினி வகை கார்கள் வினாடிக்கு 100 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இந்த கார்களின் ஆரம்ப விலை 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments