185 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தீ.. பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது..!

0 2532
185 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தீ.. பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது..!

பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் இருந்து 185 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட  ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தீ பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் மீது பறவை மோதியதால், ஒரு இன்ஜின் செயலழிந்து தீ பிடித்தது. இதை பார்த்த உள்ளூர்வாசிகள், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை மூலம் விமானிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments