தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

0 2763
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், ஜூன் 22, 23ல் வட தமிழகம், குமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments