"உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி 28 சதவீதம் அதிகரிப்பு.. 24 நாட்கள் மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு" - மத்திய நிலக்கரி அமைச்சகம்

0 1908
"உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி 28 சதவீதம் அதிகரிப்பு.. 24 நாட்கள் மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு" - மத்திய நிலக்கரி அமைச்சகம்

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி 28 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், 24 நாள் மின்னுற்பத்திக்குத் தேவையான அளவு சுரங்கங்களில் இருப்பு உள்ளதாகவும் மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மே இறுதிவரை 13 கோடியே 80 இலட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்குக் கோல் இந்தியா சார்பில் குறுகிய கால, நீண்ட கால டெண்டர்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments