"முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை" - அமைச்சர் துரைமுருகன்

0 4330
"முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை" - அமைச்சர் துரைமுருகன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஜலதோஷம் போன்ற காரணங்களால் அவர் ஓய்வில் உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற 'மகுடம் மறுத்த மாமன்னன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், மருத்துவர்கள் அறிவுறுத்தலால், முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றார்.

இதனிடையே, நாளையும், நாளை மறுதினமும் முதலமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments