ஏழை எளியோரின் திருமண நிதி சுமையைக் குறைக்க திட்டம்.. மீண்டும் கல்யாண மஸ்து திட்டத்தை துவக்க அரசு உத்தரவு..!

0 2525
ஏழை எளியோரின் திருமண நிதி சுமையைக் குறைக்க திட்டம்.. மீண்டும் கல்யாண மஸ்து திட்டத்தை துவக்க அரசு உத்தரவு..!

ஆந்திராவில் ஏழை எளியோருக்கு இலவசமாக திருமண செய்து வைக்கும் கல்யாண மஸ்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மாநிலத்தின் 26 மாவட்ட மையங்களில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கல்யாண மஸ்து திட்டம் மூலம் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்யாண மஸ்து முகூர்த்த பத்திரிக்கை பேடி ஆஞ்சநேட்ய சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏழை எளிய மக்களின் திருமண நிதி சுமையை குறைக்கும் வகையில் ஜோடிகளுக்கு இலவசமாக ஆடை, தாலி, மெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு திருமண போஜனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments