புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தல்.. 2,400 மதுபாட்டில்கள் பறிமுதல்.!

0 1983

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 400 மதுபாட்டில்களை கடத்திய 6 பேரை மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட மத்திய புலனாய்வு மற்றும் மது விலக்கு அமலாக்க போலீசார், சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 கார்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

50 அட்டை பெட்டிகளில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments